நடிகை த்ரிஷா வளர்க்கும் நாய்க் குட்டி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.நடிகை த்ரிஷா, நாய்கள் மீது அதீத பிரியம் கொண்டவர். படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் நாய்களுடனேயே தனது நேரத்தை த்ரிஷா செலவிடுவார். இந்த நிலையில், அவரின் மகளாக நினைத்து ஆசையாக வளர்த்து வந்த ஸோரோ என்ற நாய், 2024 கிறிஸ்துமஸ் நாளில் இறந்தது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான த்ரிஷா, அதனை சமூக ஊடகத்திலும் பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில்தான், அவருக்கு ஆறுதலாக குடும்பத்தில் மீண்டும் ஒரு நாய்க்குட்டி வந்ததாகவும், அதற்கு இஸ்ஸி என்று பெயர் சூட்டிருப்பதாகவும் த்ரிஷா தெரிவித்தார்.இதனிடையே, இஸ்ஸி நாய்க்குட்டியானது தன்னுடைய பூடில் வகை டெடி நாயின் குட்டிதான் என ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.விஷ்ணு விஷாலின் மனைவியும் த்ரிஷாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி நாய்கள் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?விஷ்ணு விஷால் , நடிகை த்ரிஷாVishnu Vishal on Izzy, the dog raised by actress Trisha.