உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன? கேப்டன் பதில்!

Wait 5 sec.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓவலில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூலை 2) மோதுகின்றன.இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பேசியுள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இறுதிப்போட்டிக்கு முன்பாக ஐந்து நாள்கள் இடைவெளி உள்ளது. நன்றாக உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதைக் கொண்டாட வேண்டும். அதைக் கண்டிப்பாக செய்வோம். இறுதிப்போட்டி குறித்து அதிகம் யோசித்துக் கொண்டிருக்காமல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இறுதிப்போட்டியில் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூலை 5-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.The Australian team's captain has spoken about the team's strategy for the final of the ICC Women's T20 World Cup.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி தயாரா?