மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முழு உரிமையையும் கோரி ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, அக்கட்சியின் பெரும்பாலான சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினர் கட்சியின் முழு உரிமையையும் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளை இன்று (ஜூலை 2) சந்தித்த ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் “இரட்டை மலர்” சின்னம் மற்றும் அதிகாரப்பூர்வ பெயருக்கும் உரிமைக் கோரியுள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரிதப்ரதா பானர்ஜி, கடந்த ஜூன் 22 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற தங்கள் பிரிவின்அமைப்பு ரீதியான சிறப்பு கூட்டத்தையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மீதான தங்களின் உரிமைக்கோரலுக்கு அடிப்படையாக்கி தங்கள் தரப்பு வாதத்தை முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.இதுபற்றி, அவர் கூறியதாவது: “திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த ஜூன் 22 அன்று சிறப்பு கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துப்பூர்வமாகத் தகவல் தெரிவித்தோம். நாங்கள் கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணையத்தை நேரில் சந்தித்து இந்திய தேர்தல் ஆணையத்தைச் சந்திப்பதற்கான நேரத்தையும் கோரினோம். நாங்கள் எங்கள் தரப்பின் வாதத்தை முன்வைத்துள்ளோம்; தேர்தல் ஆணையம் மிக விரைவில் எங்களைத் தொடர்புகொள்ளும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ள ஆவணங்களின் விவரங்கள் குறித்த தகவலை வெளியிடுவதற்கு ரிதப்ரதா பானர்ஜி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்!faction led by Ritabrata Banerjee has submitted a petition to the EC, claiming full ownership of the Trinamool Congress party.