அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னதாக, தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.இதையடுத்து, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தெவெகவில் இன்று இணைந்தனர்.இதுகுறித்து பெ. சண்முகம் பேசியதாவது:ஏற்கெனவே, நான்கு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தோம். இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல். இதுபோன்ற நடவடைக்கைகளை ஊக்குவிக்கக்கூடாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தவெக தலைமையிடமும் எங்களுடைய கருத்துகளை தெரிவித்திருந்தோம். அதற்கு தவெக தரப்பில், அவர்கள் (அதிமுக எம்எல்ஏக்கள்) தானாக முன்வந்து ராஜிநாமா செய்கிறார்கள் அதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் ? என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போதே ‘நீங்கள் ஏன் கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்? இந்த வாய்ப்பு அவர்களுக்கு வேறொரு இடம் உள்ளது என்று ஊக்கம் கொடுப்பது போலத்தானே உள்ளது’ என்ற என்ற அதிருப்தியை தவெக தலைமையிடத்தில் தெரிவித்திருந்தோம். இப்போதும் இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! CPI(M) State Secretary P. Shanmugam has stated that AIADMK MLAs joining TVK constitutes unhealthy politics.