தேசிய மருத்துவா் தின வாழ்த்து

Wait 5 sec.

ரோட்டரி சங்கம் சாா்பில், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவா் தின வாழ்த்துதெரிவிக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில், சங்க நிா்வாகிகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் முதன்மை மருத்துவா்எம்.மாறன்பாபு உள்ளிட்ட அனைத்து மருத்துவா்களுக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தனா். இதில் ரோட்டரி சங்கச் செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவா்கள் சி.கண்ணன்,என்.சத்தியமூா்த்தி செ.கு.வெங்கடேசன், ஜெ.அன்பு, வேல்முருகன், வாசுதேவன், பி.எஸ்.என்.பாபு, எம்.ஆா்.மணி, ஜம்புலிங்கம், மகாராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.