ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!

Wait 5 sec.

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சிக்கு இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்க பிரதமர் நரேந்திர மோடி கற்றுக்கொடுத்துள்ளார். ஜப்பானின் பிரதமர் தகைச்சி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா - ஜப்பான் இடையே வர்த்தகம், முதலீடு, இறக்குமதி உள்ளிட்ட துறைகளின் கீழ் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தப் பயணத்தில், ஜப்பானிய பிரதமர் தகைச்சி பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். மேலும், இருவரும் சந்தித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஜப்பானிய பிரதமர் தகைச்சியை தனது இளைய சகோதரி எனக் குறிப்பிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான ஹிந்தூஸ்தானி சந்தூரை வாசிக்க இன்று (ஜூலை 2) பிரதமர் தகைச்சிக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் சொல்லிக்கொடுப்பதைக் கவனித்த பிரதமர் தகைச்சி அந்த இசைக்கருவியை வாசிக்கும் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. Japan PM Sanae Takaichi tries her hand on Santoor musical instrument. Ctsy: PMO Insta pic.twitter.com/Jrz9lbPSI4— Sidhant Sibal (@sidhant) July 2, 2026மதப் பேரணியில் மோதிய 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம்! 9 புத்த துறவிகள் பலி! PM Modi has taught Japanese PM Takaichi how to play a traditional Indian musical instrument.