சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பேசியுள்ளார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பென் ஸ்டோக்ஸின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கேட்க முயற்சித்ததாகவும், ஆனால் ஓய்வு பெறும் முடிவில் அவர் தெளிவாக இருந்தார் எனவும் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போவதாக என்னிடம் பென் ஸ்டோக்ஸ் கூறியவுடன், அவரது முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கூறினேன். ஆனால், அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்துவிட்டார். அவருடன் நான்கு ஆண்டுகள் ஒன்றாக பயணித்துள்ளேன். அவரது ஓய்வு முடிவை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது.பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து பயணித்ததை கௌரவமாகக் கருதுகிறேன். அவரை நல்ல நண்பராகவே கருகிறேன். அவர் அணியை நன்றாக வழிநடத்தக் கூடியவர். அவர் எங்கு சென்றாலும், அவருக்கென தனி கூட்டம் என்பது இருக்கும். அவர் அணியில் இல்லாததை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம். அவரைப் போன்ற வீரர் ஒருவரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்றார்.இங்கிலாந்து அணிக்காக 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 7273 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.The England team's head coach has spoken about captain Ben Stokes' retirement from international cricket.இந்திய அணி டி20 தொடரை இழந்தது ஆச்சரியமளிக்கவில்லை: அம்பத்தி ராயுடு