2 நாள்களுக்கு முன்பு குழந்தை இழப்பு... கோல் அடித்து சமர்ப்பித்த நெதர்லாந்து வீரருக்கு ரசிகர்கள் மரியாதை!

Wait 5 sec.

நெதர்லாந்து வீரர் கோடி காக்போ (27 வயது) தான் கோல் அடித்த பிறகு, அதனை இரண்டு நாள்களுக்கு முன்பாக இறந்துபோன தனது குழந்தைக்குச் சமர்பித்தார். அவர் வெளியேறும்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரவோசையை எழுப்பி மரியாதை செலுத்தினர். ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி மிகவும் விருவிருப்பாகச் சென்றது. இதில் 1-1 என சம நிலையில் முடிந்ததால். ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்குச் சென்றது. பெனால்டியில் நெதர்லாந்து அணி 2-3 என தோல்வியுற்றது. இதனால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 72ஆவது நிமிஷத்தில் கோடி காக்போ கோல் அடித்து அசத்தினார். கோல் அடித்ததும் மண்டியிட்டு வான் நோக்கி கையை உயர்த்தி பிரார்த்தனை செய்தார். சக வீரர்களும் அவரைக் கட்டியணைத்தார்கள்.கடந்த சனிக்கிழமை காக்போவின் மனைவி நோவா வான் டெர் பிஜ் கருவில் இருந்த 5-6 மாதங்களான குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தத் துயரத்துக்குப் பிறகும் காக்போ நாட்டிற்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். இந்தப் போட்டியின் 113ஆவது நிமிஷத்தில், கீழே விழுந்ததால் காக்போ போட்டியில் இருந்து வெளியேறினார். அப்போது திடலில் இருந்த நெதர்லாந்து ரசிகர்கள் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. This video Cody Gakpo breaks my heart Look at him fighting through the tears after scoring for Netherlands. pic.twitter.com/rxasRRVuWE https://t.co/lbJ59H9eAC— Ipostanything LFC (@postanythingLFC) June 30, 2026பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!A goal, a prayer and a standing ovation for Netherlands Cody Gakpo amid personal grief