11வது நாளாக சிஜேபி போராட்டம்: உண்ணாவிரதத்தினால் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

Wait 5 sec.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) 11 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் நடைபெற்ற குளறுபடி போன்றவற்றை காரணம்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தங்களுடைய நாடுதழுவிய போராட்டத்தைத் தொடங்கினர்.அதன்படி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஜெய்பூர், புணே போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் கரப்பான்பூச்சி கட்சியைச் சார்ந்த ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரில் தங்களுடைய போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டமானது இன்றோடு 11 வது நாளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.கல்வி முறைகேடுகளுக்கு எதிராகவும், லடாக்கிற்கு தன்னாட்சி அதிகாரம் கோரியும் தனது உண்ணாவிரதத்தை தீவிரப்படுத்தியுள்ளார் சோனம் வாங்சுக்.இதுகுறித்து அபிஜீத் தீப்கே தெரிவித்ததாவது:போராட்டத்துக்கு பங்கேற்க வருபவர்களை காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளைக் காரணம்காட்டி போராட்ட களத்துக்குள் அனுமதிப்பதில்லை. எங்கள் குழுவைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.ஜந்தர் மந்தருக்கு வருவதற்கு முறையான போக்குவரத்து வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்போராட்டத்தில் உண்ணாவிரதம் உள்ள சோனம் வாங்சுக் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?Members of the CJP have been staging a protest for the 11th consecutive day at Jantar Mantar in Delhi, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan.