இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று(ஜூன் 30) பொறுப்பேற்றுக் கொண்டார்.முன்னதாக, இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கடந்த 2024 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில் இன்றுடன்(ஜூன் 30) அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதனால் திவிவேதி இன்று பதவி ஓய்வு பெற்றார். நாட்டின் 31 ஆவது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி ராணுவ துணைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1986ல் ராணுவத்தில் சேர்ந்த அவர், 40 ஆண்டுகள் ராணுவத்தில் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார். புணே கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர். ராணுவ கமாண்டர், கவசப் படைப்பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். தென் பகுதியின் கமாண்டராக இருந்து பின்னர் ராணுவ துணைத் தளபதியானார். பாலைவனப் பகுதிகள், மேற்குப் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீா் என நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதமேந்திய படைகளை வழிநடத்தியுள்ளாா். ராணுவத்தை நவீனப்படுத்தவும், வலுப்படுத்துவதற்குமான வியூகத் திட்டங்களை வகுப்பவராக அறியப்படுகிறார். லெப்டினன்ட் ஜெனரலாக, ராணுவத்தின் அதிதிறன் மிக்க தாக்குதல் படைகளில் ஒன்றான ‘சக்ரா காா்ப்ஸ்’ படையை வழிநடத்தியுள்ளாா். தில்லி பகுதியில் கமாண்ட் அதிகாரியாக பதவி வகித்தபோது தேசிய மற்றும் சா்வதேச ராணுவ ஒத்துழைப்புகளுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளாா்.ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, நேற்று(ஜூன் 29) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து உத்தம் யுத் சேவா பதக்கம் பெற்றார். இந்திய எல்லைகளில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. General Dhiraj Seth takes charge as India new Army chiefவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!