காதலுடன் விடியோ வெளியிட்ட நடிகை அர்ச்சனா!

Wait 5 sec.

நடிகர் அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது காதலன் அருண் உடன் பயணம் மேற்கொண்ட விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வபோது காதலனுடன் வெளியே பயணங்கள் செல்லும் விடியோவை வெளியிடும் அர்ச்சனா, இம்முறை காரில் இருந்தவாறு தனது காதலன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை விடியோவாக பதிவிட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். இத்தொடரில் வில்லியாக இவரின் நடிப்பு பலரைக் கவர்ந்தது. இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்றாலும் பட்டத்தை வென்று ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர், சின்ன திரை நடிகர் அருண் பிரசாத்தை காதலித்து வருகிறார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற அருண், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலி அர்ச்சனாவுக்கு நேரலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது, இவர்களிடையேயான காதல் உறுதியானது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அருண் பிரசாத் உடன் அர்ச்சனாஇதனிடையே இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துவரும் அர்ச்சனா, தற்போது காதலுடன் காரில் செல்லும் விடியோவை பகிர்ந்துள்ளார். அர்ச்சனா - அருண் பிரசாத்அதில், பயணத்தின் நடுவே இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அர்ச்சனாவுக்கு முத்தம் கொடுக்கிறார் அருண். இந்த நிகழ்வும் விடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமிய ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 12 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா!Actress Archana ravichandran releases a video filled with lover Arun prasath