நடிகர் ஷண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை. மேலும், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் திரு இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகவும் இதனை எல். கே. சுதீஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் திரு நடிகர் விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 70 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்... இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம்!Information regarding actor Shanmuga Pandian's new film has been released.