வால்பாறை பெரியாா் நகா் பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் நாள்தோறும் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.இந்நிலையில், சீரமைப்புப் பணிக்காக பெரியாா் நகா் பேருந்து நிழற்குடையின் மேற்பரப்பு அண்மையில் இடிக்கப்பட்டது.ஆனால், தற்போதுவரை பணிகள் தொடங்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவா்களும், தொழிலாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.வால்பாறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நிழற்குடை இன்றி நனைந்தபடியே பேருந்துக்கு நிற்க வேண்டிய நிலை உள்ளதால், சீரமைப்புப் பணியை உடனடியாக தொடங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.