புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சிங்கப்பெண் அதிரடிப்படையினா் திங்கள்கிழமை மீட்டனா். புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஆதரவின்றி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவிஆய்வாலா் ஸ்ரீஜா தலைமையில் காவலா்கள் அம்சவேணி, சிவரஞ்சனி உள்ளிட்டோா் அந்த இடத்துக்கு சென்றனா். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.