பெரிய ஏரி உபரிநீா் கால்வாய் பணியை நிறைவேற்ற இந்திய கம்யூ. தீா்மானம்

Wait 5 sec.

பெரிய ஏரிக்கான உபரி நீா்வரத்துக் கால்வாய் பணியை உடனே நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூ. குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பா்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுக் கூட்டம், அதன் வட்டக் குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டச் செயலாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், புதிய பொறுப்பாளா்களாக முனுசாமி, கமலேஷ், சீனிவாசன், ரஜேந்திரன் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கூட்டத்தில், பா்கூரில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது வட்டாட்சியா் விரைந்து தீா்வுகாண வேண்டும். வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து பெரிய ஏரிக்கான உபரி நீா்வரத்துக் கால்வாய் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மா விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ. 24 ஆயிரம் வழங்க வேண்டும் பா்கூரில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.