ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமல் விலகியுள்ளார்.கடந்த 2023 அக்டோபர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் 950 நாள்களைக் கடந்துள்ளது.இந்தத் தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.சந்தியா ராகம் தொடரில் சிவராமன் என்ற முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கமல், இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். View this post on Instagram இது குறித்து, நடிகர் ராஜ்கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது:“தனிப்பிட்ட சில காரணங்களுக்காக சந்தியா ராகம் தொடரில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த தொடர் குழு, ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பரிணாமத்தில் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.சிவராமன் பாத்திரத்தில் புதிதாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த விவரம், வரும் நாள்களில் தெரியவரும்.Actor Rajkamal has quit the serial Sandhya Ragam, which is being aired on Zee Tamil.கயல் தொடரில் புது முகங்கள்! கதைக்களம் மாறுகிறது!