ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெறும் மாலிவுட் டைம்ஸ்!

Wait 5 sec.

நடிகர் நஸ்லன் நடிப்பில் உருவான மாலிவுட் டைம்ஸ் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்று வருகிறது. பிரேமலு திரைப்படம் மூலம் பெருமளவில் கவனமும், மொழிகளைக் கடந்த ரசிகர்களையும் பெற்றவர் நடிகர் நஸ்லன். அவர் நடித்து வெளியான, “ஆலப்புழை ஜிம்கானா” படமும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “மாலிவுட் டைம்ஸ்”. சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞனின் ஹாரர் படம் எடுக்கும் முயற்சியைக் கதைகளமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது, ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சினிமா மட்டுமல்லாது லட்சியம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் சிலர் பரிந்துரை செய்து வருகின்றனர். மலையாள சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக நடிகர் நஸ்லன் வளர்ந்து வருவதால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேரள நடிகர் சங்கத்திலிருந்து ரேவதி, பத்மப்ரியா விலகல்! இதுதான் காரணமா? The Mollywood film starring actor Naslen is gaining attention following its OTT release.