க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் க்ளீன் ஷீட் பெற்று வரலாறு படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் 5 க்ளீன் ஷீட் பெற்று சாதனை படைத்துள்ளது. க்ளீன் ஷீட் என்பது ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் தடுப்பதைக் குறிக்கிறது. இந்த உலகக் கோப்பையில் எந்த அணியும் செய்யாத ஒன்றை ஸ்பெயின் அணி நிகழ்த்தி வருகிறது. நேற்றிரவு நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் - போர்ர்சுகல் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என வென்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் விட்டுக்கொடுக்காமல் சாதனை படைத்துள்ளது.முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் அணி மொராக்கோவுடன் 0-0 என முடித்தது. பின்னர், பெனாடி ஷூட் அவுட்டில் தோல்வியுற்றது. இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டே உடன் 0-0, சௌதி அரேபியா உடன் 4-0, உருகுவே உடன் 1-0, ஆஸ்திரியாவுடன் 3-0 எனவும் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக இத்தாலி 1990 உலகக் கோப்பையிலும் ஸ்விட்சர்லாந்து (2006-1010) உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 க்ளீன் ஷீட்டுகளை பெற்றிருந்தன. தற்போது, ஸ்பெயின் 6 முறை தொடர்ச்சியாக க்ளீன் ஷீட்டுகளை பெற்று வரலாறு படைத்துள்ளன. ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன் 609 நிமிஷங்கள் கோல் விட்டுக்கொடுக்காமல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். Spain are the first team in World Cup to keep a clean sheet in six consecutive games pic.twitter.com/JZ8Oq7GldT— Prime Video Sport UK (@primevideosport) July 7, 2026யூரோ கோப்பையும் உலகக் கோப்பையும் ஒன்றுதான்... தோல்விக்குப் பிறகு பேசிய ரொனால்டோ!Spain breaks clean sheet record during Portugal win at FIFA World Cup 2026