தஞ்சை மாவட்டத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பதாக ராம.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழைமையான பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயிலின் நிலத்தில் 1990-ல் பெரியார் சிலை நிறுவப்பட்டது.கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பது குறித்த தகவல்கள்கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ராம. ரவிக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அறநிலையத்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் பதிலளித்துள்ளது.இந்த நிலையில், கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவ இந்து சமய அறநிலையத் துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கோயில் நிலத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ளதாகவும்கூறி, சிலையை அகற்ற அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் தலைமையில் எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் திருமாவளவன், ஆ. ராசா?Rama. Ravikumar demands removal of Periyar statue from temple land