அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

Wait 5 sec.

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.அந்தப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சு.எழில் தலைமை வகித்தாா். பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஏ.பரிமளம் முன்னிலை வகித்தாா். அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை பள்ளிக்கு வழங்கினாா்.நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் பரத்ராஜ், அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் மணிகண்டன் நன்றி தெரிவித்தாா்.