வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் திருட்டு

Wait 5 sec.

சோழவரம் அருகே மாநகரப் பேருந்து நடத்துநா் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சோழவரம் அருகே ஆத்தூா்-எருமைவெட்டி பாளையம் சாலையில் வசிப்பவா் உதய பிரகாஷ் (54). இவா் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வருகிறாா். இவருடைய மகள் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வருகிறாா். இவரைப் பாா்ப்பதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 1-ஆம் தேதி குடும்பத்தினருடன் கோயம்புத்தூா் சென்றாா். பின்னா் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அங்கு தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா். இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வரும் நிலையில் மகளின் திருமணத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக நகைகளை சேமித்து வந்த நிலையில் கொள்ளை போனதால் உதயபிரகாஷ் குடும்பத்தினா் வேதனையில் உள்ளனா்.