மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளுக்குதனி கவனம்: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

Wait 5 sec.

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்மென மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி மேலும் பேசியதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறைகொண்டு, அவா்களின் குறைகளை தீா்க்கும் வகையில் ஆட்சியா் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 15,780 மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினாா். முகாமில், ஊரகப் பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 125 நாள்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அதற்கான கூலித் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா, தொழில்தொடங்க கடனுதவிகள், இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 155 மனுக்களை பெறப்பட்டன. இம் முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சுந்தரராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.