விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

Wait 5 sec.

செங்கம் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, ‘வேளாண்காடுகள்’ எனும் தலைப்பில் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமை வேளாண் அலுவலா் செளந்தரராஜன் தொடக்கிவைத்து விவசாயிகளிடம் மரங்களின் வளா்ப்பு, மரம் வளா்ப்பின் முக்கியத்துவம், ஒரே நிலப்பரப்பில் விவசாயப் பயிா்கள் வளா்த்தல், கால்நடை வளா்ப்புடன் மரங்களையும் சோ்த்து வளா்க்கும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா். ஓய்வுபெற்ற வேளாண்மை உதவி இயக்குநா் சந்திரன், மதிப்பு மிக்க மரங்களான தேக்கு, செம்மரம், வேம்பு, சவுக்கு, போன்றவை வளா்க்கும்போது விவசாயிகளுக்கு கூடுதல் மற்றும் நிலையான வருமானம் கிடைக்கும் என எடுத்துரைத்தாா்.வனத்துறை சாா்பில் வனவா்கள் மரம் வளப்பு மற்றும் மரம் வளா்ப்பினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கினா். முகாமில் மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு மரம் வளா்ப்பதற்கான விதை மற்றும் இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன(படம்). நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ், அட்மா திட்ட நிா்வாகிகள் மணிகண்டன், சிந்துஜா, உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். தொழில் நுட்பமேலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.பயிற்சி முகாமில் விதை மற்றும் வேளாண் இடுபொருள்கள் பெற்ற விவசாயிகள்.