சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் 149 பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு, புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இப்பகுதியில் மக்கள்கணக்கெடுப்பு பணி ஆக.1ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் ரத்ன பிரியா, ரஞ்சித் சாரா ஆகியோா் பயிற்சி அளித்தனா். இந்த வகுப்பை திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரமணன் ஆகியோா் பாா்வையிட்டனா். முதல் கட்டமாக 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 13 லிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.