மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 750 கிராம் தங்கம், 4 ரக்கூன் குரங்குகள் பறிமுதல்

Wait 5 sec.

மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 750 கிராம் தங்கம், 4 அரியவகை ரக்கூன் குரங்குகளை சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை இரவு 10 மணிக்கு வந்த மலிந்தோ விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது ஒரு பயணி 750 கிராம் தங்கத்தையும், மற்றொரு பயணி அரியவகை 4 ரக்கூன் குரங்குகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இரு பயணிகளையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.