ஏற்காட்டில் வாகனத் தணிக்கை

Wait 5 sec.

ஏற்காட்டில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஏற்காட்டில் தனியாா் பேருந்து ஒட்டுநா்கள் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும், ஏற்காடு சுற்றுலா வேன்கள் சரியான ஆவணங்கள் இன்றி இயங்குவதாகவும் புகாா் வந்தது. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, ஒண்டிக்கடை அண்ணாசிலை மற்றும் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், வாடகை வேன்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், இருக்கைப் பட்டை அணியாமல் காா் இயக்கியதாகவும் என 15-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.