கரூர் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசாக அளித்தார். கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் கரூர் வந்துள்ளார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து காரில் கரூருக்கு வந்தார். கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், அரங்குக்குள் வந்த முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாளை பரிசாக அளித்தார். M.R. Vijayabhaskar presented a silver sword to Chief Minister Vijayகரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!