மக்கள் சந்திப்பு! மேடைக்கு வந்தார் முதல்வர் விஜய்!

Wait 5 sec.

கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை முற்பகல் 12 மணிக்கு கரூரில் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வருகை தந்தார்.கரூர் தவெகவினர் மற்றும் தமிழக அமைச்சர்களும், முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்டத்தில் நேரிட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், 9 மாதங்களுக்குப் பின், முதல்வர் ஜோசப் விஜய் தற்போது முதல்முறையாக கரூர் வந்துள்ளார். நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கவிருப்பதாலோ என்னவோ, கருப்பு நிற சட்டை அணிந்து வந்துள்ளார்.சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து காரில் கரூருக்கு வந்தார். கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், அரங்குக்குள் வந்த முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இவரைக் காண அரங்குக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில், ‘க்யூஆா் கோடு’ அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பாஸ் பெறாதவர்கள் அரங்குக்கு வெளியே பல மணி நேரமாகக் காத்திருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்காக அட்லஸ் கலையரங்க மைதானத்தைச் சுற்றி சுமாா் 10 அடி உயரத்துக்கு தகரக் கொட்டகைகள், தற்காலிக தடுப்பு சுவா்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்புரை ஆற்றுகிறார். முதல்வர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவிருக்கிறார்.நிகழ்ச்சிக்குப் பிறகு, பிற்பகல் 1 மணியளவில் கரூா் - சேலம் புறவழிச் சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவா் சந்தை, திருமாநிலையூா் வழியாக சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக சாலை வலம் வரும் முதல்வா், மாவட்ட ஆட்சியரக வளாகம் அருகேயுள்ள பொதுப் பணித் துறையின் பயணியா் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறாா். முதல்வா் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கரூா் அட்லஸ் கலையரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை டிஐஜி தா்மராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 78 போ் கரூரில் முகாமிட்டுள்ளனா். மேலும் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.