லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது என்று சொன்னவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள் என முதல்வர் விஜய் கரூர் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் ரத்தத்தில் ஊறிப்போனது என சொன்னவர்கள் ஒவ்வொரு அரசு அலுவலர்களுக்குச் சென்று பாருங்கள்.. ஒரு பைசா லஞ்சம் இல்லை. ஒரு பைச ஊழல் இல்லை. வேலையெல்லாம் வேகமாக நடைபெறுகிறது. அரசு அலுவலகத்தில் ஒரு பெரியவர் சொல்கிறார். தம்பி வேலையெல்லாம் நடக்கின்றது. ஆனால், அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதைக் கொடுக்கிறார்கள். அமர வைத்துப் பேசுகிறார்கள். இதற்கு முன்பு இதெல்லாம் நடந்ததேயில்லை. அவன போய் பாரு, இவன போய் பாரு என்று அலைக்கழிப்பார்கள். இப்போது லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை வேலையெல்லாம் உடனே நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் பெருமூச்சு விடுகிறார்கள். அதைப் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. ஏன் இதையெல்லாம் செய்ய முடியாது, மனம் இருந்தால் எல்லாம் நடக்கும். எல்என்டி நிறுவனத்துடன் 18 ஆயிரம் கோடிக்கு மூன்று திட்டங்கள் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்களிடம் யாரெனும் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். இது உங்கள் விஜயோடு ஆட்சி என தைரியமாகச் சொல்லுங்கள் என்று அவர் பேசினார்.