கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

Wait 5 sec.

கரூரில் முக்கிய சாலைகள் வழியாக முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக முதல்வர் ஜோசப் விஜய், இன்று கரூர் வந்துள்ளார். நண்பகல் 12 மணியளவில் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். கரூர் சம்பவம் மிகுந்த வலியும் வேதனையும் தந்ததாகவும் கரூர் சம்பவத்துக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்றும் பேசினார். கரூர் சம்பவத்தில் பழியை என்மீது போட்டு மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று கூறினார். இதன்பின்னர் கரூரில் முக்கிய சாலைகள் வழியாக அவர் சாலைவலம் மேற்கொள்கிறார். திறந்த வேனில் நின்றபடி அவர் தொண்டர்களை, மக்களைப் பார்த்து கையசைத்துச் செல்கிறார். வழிநெடுக அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார். கரூரில் காலணி தொழிற்சாலைக்குன் அடிக்கல் நாட்டுகிறார். கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்! தங்க மோதிரம் திட்டம் எப்போது? விஜய் தகவல்