கட்சி நிதி என்றவுடன் ஒரே ஓட்டம்! அரசு அலுவலங்களில் லஞ்சம், ஊழல் இல்லை! முதல்வர் விஜய்

Wait 5 sec.

கட்சி நிதி என்றதும் எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள் என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், "கட்சி நிதி என்ற பெயரில் தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி கொள்ளை அடிக்கிறது. பேரவையில் 'கட்சி நிதி' என்று எந்த கட்சியின் பெயரையும் நான் சொல்லவில்லை, ஆனால் ஒரே ஓட்டம்தான். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். இவர்களால் ஒரே வேடிக்கையாக இருக்கிறது சென்னையில் பாலம் கட்டுவதற்கு ஆகும் செலவைவிட அதிக செலவுக்கு டெண்டர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை ரத்து செய்திருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் ஊழல்தான். விஜய் திரும்பும் பக்கம் எல்லாம் அவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறைதான். லஞ்சம், ஊழல் ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள்... இன்று அரசு அலுவலகங்களில் எந்த லஞ்சமும், ஊழலும் இல்லை. அலுவலகங்களில் வேலை வேகமாக நடக்கிறது. மக்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். அதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எல் & டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக குறுவை சாகுபடி திட்டம். விவசாயிகளுடன் இந்த அரசு உடன் நிற்கும். அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்.முதல்வர் வாயைத் திறங்க என்று பேசினார்கள். ஆனால் பேசினால் ஓடிவிடுகிறார்கள்" என்று பேசினார். Opposition parties ran off the moment party funds were mentioned: CM Vijayகரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்