கரூரில் உற்சாக வெள்ளத்தில் தவெகவினர்! முதல்வர் விஜய்யைக் காண காத்திருந்தோர் சொல்வது என்ன?

Wait 5 sec.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசி வருகிறார். முன்னதாக, அவரைக் காண கரூரில் ஏராளமான மக்கள் வழிநெடுகிலும் காத்திருக்கிறார்கள்.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்குள் வெறும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பாஸ் கிடைக்காததால், உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் மக்கள் பலரும், நாங்கள்தான் முன்கூட்டியே பாஸ் வாங்கவில்லை. இதற்கு முதல்வர் என்ன செய்வார். அவரை தொலைவிலிருந்தாவது பார்த்துவிட்டால் போதும் என்றுதான் வெய்யிலில் காத்திருக்கிறோம் என்கிறார்கள்.அரங்குக்கு அருகே முதல்வர் விஜய்யை முதல் முறையாக பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கும் பெண் ஒருவர் பேசுகையில், முதல்முறையாக பார்க்கப் போகிறேன் முதல்வர் விஜய்யை. எப்போ வருவார் என்று காத்திருக்கிறேன். கடைசி முறை கரூர் வந்த போது, அவருக்கு லேசான மனக்கசப்போடு அனுப்பிவிட்டோம். இந்த முறை கரூர் வரும் அவரை சந்தோஷமாக அனுப்ப வேண்டும் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக சந்தோஷமாகத்தான் அனுப்புவோம் என்று கூறினார் மகிழ்ச்சியோடு.அடுத்து, கரூர் மக்கள் சந்திப்பு அரங்கத்துக்குள், பாஸ் பெற்று விஜய் வருகைக்காக காத்திருந்த பெண் ஒருவரிடம், ஊடகத்தினர் பேசுகையில், கடந்த முறை கரூர் வந்த போது, முதல்வர் விஜய்யை, நெடுஞ்சாலையில் நின்று பார்த்தோம். ஆனால், கூட்டம் நடைபெறும் அரங்குக்குச் செல்லவில்லை. ஒருவேளை போயிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்று தெரியவில்லை என சிரித்தபடி கூறினார்.இப்படி ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் பலரும், முதல்வர் விஜய்யைக் காண ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.