சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் மேடை 1-ல் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் நோக்கி செல்லும் ரயில்கள் பயணிக்கும் பிரதான வழித்தடமாக இது உள்ளது. சமீபத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 41 புறநகர ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நெரிசல் மிகுந்த நேரத்தில் தற்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால், அந்தப் பகுதியில் மட்டும் ரயில்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல புறநகர் ரயில்கள் தாமதமாகியுள்ளது. தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். Damage to the track... Train services between Chennai Beach and Tambaram disrupted!நானே ஒரு அரசு பள்ளி மாணவி: விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!