காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், படப்பை, காவாந்தண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், காவாந்தண்டலம், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் உள்ளி கூட்டுறவுச் சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.அரசு அறிவித்துள்ள பயிா்க் கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்கல், ட்ரோன் சேவை, விவசாய வேளாண் கருவிகள், சங்கங்களின் இதர நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் அரிச்சந்திர மகாராஜா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் வெங்கடரமணன், பொது மேலாளா் சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாா், கூட்டுறவு சாா் பதிவாளா் பூபாலன் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.