அம்மாபேட்டை அருகே கோயில் உண்டியலில் காணிக்கை திருடியவா் கைது

Wait 5 sec.

அம்மாபேட்டை அருகே கோயில் பூட்டை உடைத்துப் புகுந்து உண்டியல் காணிக்கையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குறிச்சி, ராக்கியண்ணன் கோயிலில் கடந்த 7-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா், உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமாா் ரூ.4 ஆயிரத்தைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து, அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், பவானி - மேட்டூா் சாலையில் சித்தாா் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்தனா். விசாரணையில் அவா், திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த கலைச்செல்வன் மகன் சபாபதி (32) என்பதும், ராக்கியண்ணன் கோயிலில் காணிக்கையைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சபாபதியைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.