கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை

Wait 5 sec.

கோத்தகிரி நகரில் குடியிருப்பு பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா்,கோத்தகிரி பகுதிகளில் அண்மைக் காலமாக உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கோத்தகிரி டானிங்டன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலவியது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத் துறையினா் கோத்தகிரி நகா் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைக் கண்காணித்து கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.