நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக்

Wait 5 sec.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 14 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் இன்று வரை 14 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரின் உடல் இதுவரை 7.5 கிலோ கிராம் எடையை இழந்துள்ளது.இந்த நிலையில் உண்ணா விரதத்தில் உள்ள சோனம் வான்சுக் -ஐ காந்தி, நாயகன் என்றெல்லாம் மக்கள் தங்களுடைய கருத்துகளை சமூக ஊடகத்தில் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள ஒரு விடியோவில் சோனம் வாங்சுக் பேசியதாவது:ஒவ்வொரு நாளும் என் உடல்நிலை மோசமாகிக் கொண்டே உள்ளது. சிறிது களைப்பாக உணர்கிறேன். பெரும்பாலான மக்கள் என்னை 21 ஆம் நூற்றாண்டின் நவீன காந்தி என்று அழைக்கிறார்கள். சிலர் என்னை நாயகன் என்று அழைக்கின்றனர். இதுபோன்ற கருத்துகள் எனக்கு சங்கடமாக உள்ளன. நான் காந்தியும் அல்ல; நாயகனும் அல்ல. என் பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்கிற சாதாரன குடிமகன் அவ்வளவுதான்.ஆகவே என்னை காந்தி, நாயகன் என்றெல்லாம் அழைக்காதீர்கள். நாட்டின் குடிமக்களாக உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களை உங்கள் சகோதர சகோதரிகளாக உணர்ந்தால் எங்களுடன் இணைந்திருப்பீர்கள். ஜந்தர் மந்தரில் நிகழும் இந்தப் போராட்டத்தில் ஒரு நாளாவது பங்கேற்க முயற்சியுங்கள். எங்களைப் போல நீங்களும் 24 நாள்கள் பட்டினியாக இருக்க வேண்டியதில்லை. உணவு உண்ட பிறகு வாருங்கள். ஆனால் குடிமக்களாக பொறுப்பேற்று வரும் ஜூலை 20 அன்று எங்களுடன் இணையுங்கள் என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல! ராஜ்நாத் சிங்Social activist Sonam Wangchuk has been on a hunger strike for the 14th day, demanding that Dharmendra Pradhan resign, taking responsibility for the NEET question paper leak.