பிகாரில் முறைகேட்டில் ஈடுபட்டு பணி நியமனம் பெற்றதாக 3,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பிகாரில் போலியான பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை அளித்து 3,000 ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது.விசாரணையில், 2006 முதல் 2015 இடையிலான காலகட்டத்தில் போலி கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட போலியான பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை அளித்து சுமார் 3,000 ஆசிரியர்கள் முறைகேடாகப் பணி நியமனம் பெற்றிருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து, முறைகேடாக பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.அதுமட்டுமின்றி, ஆசிரியர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வட்டியுடன் மாநில கல்வித்துறை திரும்ப பெறவுள்ளது.இதனிடையே, விசாரணையின்போதே ஆசிரியர்கள் சிலர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக முன்னரே ராஜிநாமா செய்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!Bihar to dismiss over 3,000 teachers hired using fake degrees, forged certificates to secure jobs