நாட்டில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டை யாராவது வைத்திருந்தால், அச்சப்பட வேண்டாம், அதனை இப்போதும் செல்லுபடியாகும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரூ.2000 நோட்டு வீட்டில் இருந்தால், அதனை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அல்லது செல்லும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாட்டில் 19 பணமாற்றும் அலுவலகங்களில் நேரில் வந்து 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்திய அஞ்சல்துறை மூலம் மாற்றிக் கள்ளும் வழிகள் இருப்பதை ஆர்பிஐ உறுதி செய்திருக்கிறது.ஜூலை 9ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் புழக்கத்தில் விடப்பட்ட பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. எனினும் சில நோட்டுகள் மக்களிடம் உள்ளன. Most ₹2000 banknotes in circulation have already been returned, but if you still have one, here's what you should know:- ₹2000 banknotes continue to be legal tender- You can exchange them at the 19 RBI Issue Offices- You can also send them through India Post to any RBI… pic.twitter.com/5k5AShAXSF— ReserveBankOfIndia (@RBI) July 9, 2026 ரூ.2000 நோட்டுகள் இன்னமும் செல்லுபடியாகும். நாட்டில் உள்ள 19 ஆர்பிஐயின் அலுவலகங்களில் நேரில் வந்து பணத்தைக் கொடுத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம்.அல்லது, இந்த ஆர்பிஐ அலுவலகங்களுக்கு அஞ்சல் மூலம் பணத்தை அனுப்பி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016 நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்ப்பட்டபோது ரூ.2000 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு, 2023ஆம் ஆண்டு மே மாதம் இந்த நோட்டும் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டை ஆர்பிஐ திரும்பப் பெற்று வருகிறது.