விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு மற்றும் உள்நாட்டுப் போர்க்கப்பல் கட்டுமானத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மறைந்து செல்லும் திறன் கொண்ட ஆறாவது போர்க்கப்பலான "ப்ராஜெக்ட் 17ஏ" ரகத்தைச் சேர்ந்த மகேந்திரகிரியை இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படையான விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார். துறைமுக நகரத்தில் உள்ள கடற்படைத் தளத்தில், மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. போர்க்கப்பல் தொடங்கிவைத்து ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, மும்பை மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது மகேந்திரகிரி போர்க்கப்பல். மசகான் டாக் ஷிப், இந்திய கடற்படை, ஐ.என்.எஸ் மகேந்திரகிரியின் பணியாளர்கள், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தப் போர்க்கப்பல் இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தித் திறனையும், ஆத்மநிர்பர் பாரத் மீதான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. ஐஎன்எஸ் மகேந்திரகிரியால் வான்வழி அச்சுறுத்தல்கள், மேற்பரப்பில் உள்ள எதிரிக் கப்பல்கள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களைத் திறம்பட எதிர்கொள்ள முடியும். ஆழ்கடல் போர்க்கப்பலாக, இந்தியாவின் கடல்சார் நலன்களைக் கடற்கரைக்கு அருகில் மட்டுமல்லாமல், தொலைதூர மற்றும் ஆழ்கடல்களிலும் வாரக்கணக்கில் பாதுகாக்க முடியும். இந்தப் போர்க்கப்பல் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் வடிவமைப்புத் திறன், உற்பத்தித் திறன் மற்றும் அதன் பாதுகாப்புச் சூழலமைப்பின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார். Defence Minister Rajnath Singh dedicated the warship INS Mahendragiri to the nation in Visakhapatnam.போக்சோ புகாருக்கு பழிவாங்கல்! மாணவி குடும்பம் உள்பட 6 பேரை வெட்டிக்கொன்ற கொடூரம்!