பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழந்தனா். ஜியாரத் மாவட்டத்தில் உள்ள மங்கி அணை பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த இத்தாக்குதலில் மேலும் 5 போலீஸாா் மாயமாகியுள்ள நிலையில், அவா்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.உயிரிழந்த காவலா்களுக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘நாட்டின் அமைதிக்காக உயிா்த்தியாகம் செய்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாத சக்திகள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.