வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம் என அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார். 38 நாள்களில் 19 லட்சம் பேர் அமைப்பில் இணைந்துள்ளதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தன்னெழுச்சியாக இந்த அமைப்பில் இணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அமைப்பில் இணையுமாறு யாரிடமும் கேட்கக் கூடாது என்றும் மக்கள் நமது வேலையைப் பார்த்து நம்முடன் இணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் இந்த அமைப்பின் முதல் மாநாடு இன்று (ஜூலை 12) நடைபெற்றது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டை தொடக்கி வைக்கும் விதமாக மேடையில் அண்ணாமலை குத்துவிளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர். முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலை, செருப்பைக் கழற்றிவிட்டு மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து மக்களை வணங்கினார். போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போதை விழிப்புணர்வு பாடலும் வெளியிடப்பட்டது.முதல் மாநாடு... மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலை!We have achieved 50% of the 'We the Leaders' initiative's goal Annamalai