தமிழக வெற்றிக் கழக ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் ரூ. 15 லட்சம் கோடியாக இருக்கும் என அண்ணாமலை இன்று (ஜூலை 12) தெரிவித்தார். தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது என்றும் அனுபவமற்றவர்கள் என்பதால் தவெக அரசை விமர்சிக்காமல் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மாநாட்டில் தவெக ஆட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்து அண்ணாமலை பேசியதாவது:''தவெக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 80 ஆயிரம் கோடிக்கும் குறைவாக கடன் வாங்காது. இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது. தவெக அரசு முடியும்போது ரூ. 15 லட்சம் கோடி கடன் இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அட்டை மீதான கடன் ரூ. 4.44 லட்சமாக உள்ளது.மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி என்பதே வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கு. என் மண், என் மக்கள் தொழிற்சங்க பேரவை தொடங்கியுள்ளோம். அதில் பலர் இணைய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தன்னெழுச்சியோடு வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேர்கின்றனர். பாஜகவில் இருந்து விலகிய பிறகு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டேன். திரும்பப் பெற்றுக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளேன். நான் சுதந்திரமாக மக்களுடன் பேசிப் பழக வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த 6 மாதங்களுக்கு மரம் நடுதல், நதிகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட 6 முக்கிய பிரச்னைகளுக்காக களமாடுவோம். தமிழ்நாட்டில் 5,200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்களுக்குப் பின்னணியிலும் மது உள்ளது. ஓராண்டுக்கு தவெக அரசுக்கு கோரிக்கைகளை மட்டுமே வைப்போம். செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை. கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுக அரசியல் செய்தது. வீ தி லீடர்ஸ் அமைப்பு ஒருபோதும் அற்ப அரசியல் செய்யாது.ஜூலை 26 ஆம் தேதி திருச்செந்தூரில் அடுத்த மாநாடு நடக்கவுள்ளது'' எனக் குறிப்பிட்டார். 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிBy the time the TVK government's term ends, the debt will stand at ₹15 lakh crore we the leaders Annamalai