பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மேடையில் விழுந்து வணங்கினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.மாநாட்டை தொடக்கி வைக்கும் விதமாக மேடையில் அண்ணாமலை குத்துவிளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர். முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலை, செருப்பைக் கழற்றிவிட்டு மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து மக்களை வணங்கினார். வீ தி லீடர்ஸ் அமைப்பைத் தொடங்கி நடக்கும் முதல் மாநாடு என்பதாலும், பாஜகவில் இருந்து விலகிய பிறகு நடத்தும் முதல் மாநாடு என்பதாலும் இதனை புதிய தொடக்கமாக நினைத்து மேடையில் விழுந்து அண்ணாமலை வணங்கியுள்ளார். இந்த அமைப்பில் இதுவரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அண்ணாமலை அமைப்பின் முதல் மாநாடு தொடக்கம்!Pollachi We The Leaders K Annamalai prostrated on the stage