எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்

Wait 5 sec.

எதிர்க்கட்சி தூண்டுதலின்பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாகவும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் எனவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஜூலை 12) தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:தற்போதுள்ள நிதிச் சூழலை புரிந்துகொண்டு அரசின் சீரமைப்பு முயற்சிக்கு தொழிலாளர் வரவேற்பு அளிக்கின்றனர். டாஸ்மாக் தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேசினேன். தொழிலாளர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏற்கனவே சம்பள உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ. உள்ளிட்ட பல முக்கிய முன்னெடுப்புகளைத் தொழிலாளர்களுக்காக எடுத்திருக்கிறோம். டாஸ்மாக் தொழிலாளர்களில் நலனை கருத்தில்கொண்டு மருத்துவ காப்பீடு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் பேசினார். “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்!TASMAC employees protest at the instigation of the opposition: Minister Vignesh