24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

Wait 5 sec.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதல் தாக்குதல் ஓமன் அருகே நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தாக்குதலில் கப்பல் முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனிடையே தற்போது மூன்றாவத் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், சர்வதேச வணிகத் தடமான ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வணிக நடவடிக்கைகளுக்கான மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. எண்ணெய் கப்பல் மட்டும் சேதமடைந்ததாகவும் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று, ஓமன் கடற்கரை அருகே மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த கப்பல், தாக்குதலில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக பேசிய கத்தார் செய்தித் தொடர்பாளர் மஜேத் அல்-அன்சாரி, போர்நிறுத்தத்திற்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், முற்றிலும் எதிர்பாராதது என்றும், சர்வதேச விதிமீறல் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மூன்றாவது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 14 அம்ச கோரிக்கைகளுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 200க்கும் அதிகமான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற நிலையில், இன்று மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதற்கு ஈரானே காரணம் என கத்தார் உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடுகின்றன.இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணித்ததால், ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்3 Tankers Attacked In Strait Of Hormuz In 24 Hours Amid US-Iran Ceasefire