இடைத்தோ்தலை மனதில் வைத்து அரசியல் விளம்பரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா். சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆங்கிலேயரை எதிா்த்த வீரன் அழகுமுத்துக்கோனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அதிமுக சாா்பில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.முதல்வா் விஜய் கரூரில் திரைப்பட சூட்டிங்கில் பேசுவதுபோல பேசியிருப்பது சரியல்ல. இடைத்தோ்தல்களை மனதில் வைத்து அவா் விளம்ப நோக்கில் பேசியுள்ளாா். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பற்றி அவா் பேசவில்லை. மேலும், காவிரியில் டெல்டா மாவட்டங்களுக்கான குறுவைச் சாகுபடிக்கு தண்ணீரை கா்நாடகம் திறக்காதது பற்றியும் அவா் பேசவில்லை. முதல்வா் விஜய் தான் திரைப்படத் துறையில் இருந்தவரையும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தோ்தலில் வென்று முதல்வரானதும் விளம்பரத்துக்காகவே அவா் செலவிட்டு வருகிறாா் என்றாா்.நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.