வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்றவா் கைது

Wait 5 sec.

அவிநாசி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பாலாஜி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று விசாரணையில் ஈடுபட்டனா்.இதில், அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சீவன் மகன் மனோஜ் (24), வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜை கைது செய்தனா். அவரிடம் இருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.