அரசுப் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு விருந்துக்குச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம்!

Wait 5 sec.

ராமேசுவரத்தில் பணியின் போது நகா் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு காதணி விழா விருந்துக்கு சென்ற ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தது. ராமேசுவரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நகா் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவா் மாரிமுத்து. இவா் பணியின் போது பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு போக்குவரத்து ஊழியா் ஒருவரின் காதணி விழாவுக்குச் சென்றாா். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட விடியோ பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டனா்.