கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட்ஸ் (கோல் அடிக்க உதவி புரிதல்) செய்து உலக சாதனை படைத்துள்ளார். கான்சாஸ் சிட்டியில் ஸ்விட்சர்லாந்துடன் காலிறுதியில் மோதிய ஆர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 10ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் அசத்தலான அசிஸ்ட் செய்தார். இந்தப் பந்தை மெக் அலிஸ்டர் கோலாக மாற்றினார். நடப்பு உலகக் கோப்பையில் மெஸ்ஸி 8 கோல்கள் அடித்து எம்பாபே உடன் முதலிடத்தில் சமனிலையில் இருக்கிறார். அசிஸ்ட்டில் மைக்கேல் ஒலிஸே (5) முதலிடத்தில் இருக்க, மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுடன் 12ஆவது இடத்தில் இருக்கிறார். மொத்தமாக, உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி அதிக கோல்கள் (21), அதிக அசிஸ்ட்டுகள் (10) உடன் வரலாறு படைத்துள்ளார். இதுவரை யாரும் இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக்க கோப்பையில் அதிக அசிஸ்ட்டுகள் 1. லியோனல் மெஸ்ஸி - 10 2. மாரடோனா - 8 3. லாடோ - 7 4. லிட்பார்ஸ்கி - 7 ஜன நாயகன் பாணியில் ஜூட் நாயகன்..! ஃபிஃபா வெளியிட்ட போஸ்டர்!Messi creates new history at the Football World Cup!